• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 23 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது. 30-ந் தேதி மாலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், 15 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பிச்சிவிளை 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதனை தொடர்ந்து அகரம், குறிப்பன்குளம், வெள்ளாளங்கோட்டை ஆகிய பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 7 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் கடந்த 9-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அந்தந்த யூனியன் அலுவலகங்களில் வைத்து எண்ணப்பட்டன. 

இதில் அகரம் பஞ்சாயத்து தலைவராக பா.அண்ணாஜெயம், குறிப்பன்குளம் பஞ்சாயத்து தலைவராக ப.சகாயசுமதி, வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்து தலைவராக வெ.வெயிலாட்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதே போன்று மறவன்மடம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக ச.சூசைராஜ், முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து 8-வது வார்டு உறுப்பினராக வே.பேச்சியம்மாள், பிச்சிவிளை பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக மு.ரஞ்சித்குமார், 3-வது வார்டு உறுப்பினராக சி.பெரியசாமி, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினராக மா.முத்துராஜ், வெள்ளாளன்விளை பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக ஜெ.சித்ராவதி ஜெபசீலி, சந்திரகிரி பஞ்சாயத்து 6-வது வார்டு உறுப்பினராக க.பெவின்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் : நீதிமன்றத்தில் சரண்!

குரும்பூர் அருகே கவுன்சிலர் கணவர் கொலை - 4 பேரிடம் விசாரணை - சம்பவ இடத்திற்கு எஸ்பி நேரில் சென்று விசாரணை!

  • Share on