தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகேயுள்ள செட்டிமல்லன்பட்டி கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வேல்முருகன் (32). லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (26). இந்த தம்பதியருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வேல்முருகன், மனைவியை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனிடையே மனைவியை வெட்டிக் கொன்ற வேல்முருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.