திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவசுப்பிரமணியன் (26). இவர் தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அதே கட்டுமான நிறுவனத்தில் முன்பு காவலாளியாக வேலை பார்த்து வந்த புதுக்கோட்டை அய்யப்பன்நகரைச் சேர்ந்த பொன்பாண்டி (55) என்பவருக்கும் சிவசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த 9-ந் தேதி பொன்பாண்டி மற்றும் கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் இன்பரசன் (33) ஆகிய இருவரும் சேர்ந்து கட்டுமான நிறுவனத்தின் முன்பு வைத்து சிவசுப்பிரமணியனிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன் வழக்கு பதிவு செய்து பொன்பாண்டி, இன்பரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.