தூத்துக்குடி சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேலவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளிக்கூடம் விதிமுறை மீறி கட்டப்பட்டு உள்ளது. அந்த பள்ளிக்கூடம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
தொடர்ந்து வெளியில் வந்த பாலசுப்பிரமணியன், தனது மேலாடையை கழற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் தான் கொடுத்த மனுவை வீசி எறிந்து, ஒருமையில் பேசியதாக புகார் தெரிவித்து, அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.