• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர், பழையகாயல், வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் அச்சங்கங்களில் 1983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச்சங்கங்களின் சட்டப்பிரிவு 81இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் அச்சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் சங்கப்பணியாளர்கள் மீது கடும் ஒழுங்குநடவடிக்கை மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மீது தற்காலிக பதவிநீக்கம், நிரந்தர பதவிநீக்கம் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் சங்கப்பணியாளர்கள் மீது தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நிரந்தரப்பணிநீக்கம் உள்ளிட்ட கடும் ஒழுங்குநடவடிக்கைகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மீது நிர்வாகக்குழு கலைப்பு மற்றும் நிரந்தர தகுதியிழப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மீது சந்தேகங்களோ அல்லது புகார்களோ தெரிவிக்க விரும்புவோர் தொடர்புடைய சரக துணைப்பதிவாளர் அலுவலங்களை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கைப்பேசி எண் 7338749403/ 0461-2320192, திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் கைப்பேசி எண் 7338749405/ 04639-242294, கோவில்பட்டி சரக துணைப்பதிவாளர் கைப்பேசி எண் 7338749404/04632-210370 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களையும் மற்றும் குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் கூட்டுறவு நிறுவனத்தில் புதிய உறுப்பினராக சேரவுள்ள பொதுமக்கள் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து பங்குத்தொகையாக ரூ100/- மற்றும் நுழைவுக்கட்டணமாக ரூ10/- செலுத்தி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ190/- கோடி பயிர்க்கடன் இலக்கு 2022 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் பெற விரும்பும் உறுப்பினர்கள் பயிர் செய்வதற்கான அடங்கல் சான்றுகளுடன் சங்கத்தில் மனு செய்து பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 மேலும் பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர்சுயஉதவிக்குழுக்கடன்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கைப்பேசி எண் 8525858055/ 0461-2347604, 04612347605, 0461-2347606 என்ற எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் போர்டுக்கு அனுமதி மறுப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒருமையில் பேசி மனுவை வீசி எறிந்தார் - அரை நிர்வாணத்துடன் அலுவலகம் முன்பு போராட்டம்!

  • Share on