தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கின.
தூத்துக்குடி போல்பேட்டையில் செயல்பட்டுவரும் கின்ஸ் அகாடமியில் போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கின.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கின்ஸ் அகாடமி நிறுவனா் பேச்சிமுத்து தலைமை வகித்தாா். தமிழ்நாடு கைத்தறித் துறை முதுநிலை ஆய்வாளா் ரகு பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசினாா். கைத்தறித் துறை முதுநிலை ஆய்வாளா்கள் பிரிட்மேன், செல்வகணேச பாண்டியன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
கின்ஸ் அகாடமி பயிற்றுநா்களான பேராசிரியை வாசுகி, வணிகவரித் துறை உதவியாளா் கலையரசன், கல்வித் துறை உதவியாளா் சிவகுருநாதன், ராஜபூபதி, வெற்றிவேல், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.