• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால் நக்சல்களுக்கும், போராட்டகாரர்களும் உற்சாகமா ? அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேட்டி!

  • Share on

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து,  இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

மக்கள் எல்லாம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதன் அடையாளமாகத் தான் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். இன்றும் அதே போல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த, எந்த போராட்டம் வன்முறையிலும் ஈடுபடாத பெண்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்துள்ளது. ஆனால், எதிர்ப்பு போராட்ட காரர்கள் சட்டத்தை மீறுகிறார்கள். அவர்களை அரசு ஒன்றும் செய்யமாட்டிக்குது. இந்த அணுகுமுறை கொஞ்சம் மாற வேண்டும்.

30,000 கோடி முதலீடு, பல்லாயிர கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு, என இந்த ஸ்டெர்லைட் ஆலை காப்பர் மூலப்பொருள் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகித்து கொண்டிருந்தது. ஆனால், இன்று நாம் காப்பரை இறக்குமதி செய்து வருகிறோம்.

முதலீட்டாளர்களின் முகவரி தமிழகம் என்ற நிகழ்ச்சி நடத்தி சுமார் இரண்டு லட்சம் கோடி முதலீடுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக அரசு சொல்கிறது.ஏற்கனவே 30,000 கோடி முதலீடு, பல்லாயிர கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கொண்ட ஆலையை மூடிவிட்டு அவை வருவதால் என்ன லாபம்? தற்போது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக அவர்கள் அறிவித்துள்ளது. அதனை நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை சார்ந்தவர்களோ, தமிழக அரசோ வாங்கி, அதனை இயக்கி, அதை நம்பியிருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க வேண்டும். ஆகவே, எப்படியாவது இந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வேண்டும்.

இந்த ஆலை மூடப்பட்டது என்றால், அது நக்சல்களுக்கும், போராட்ட காரர்களை சர்வதேச அளவில் தொழில் போட்டியில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதனை மூடி விடலாம்  என்பவர்களுக்கும் ஒரு உற்சாகம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.  ஆகவே எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடாது. மீண்டும் திறக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

  • Share on

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதிகளால் பரபரப்பு!

தூத்துக்குடியில் சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்!

  • Share on