தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தம்பதிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த முகமது அலி (57) என்பவர் அடமானம் வைத்த தனது சொத்தை திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் மிரட்டி எழுதி வாங்க முயற்சித்து வருவதாகவும், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அவரை காவல்துறையினர் மற்றும் சிப்காட் தீயணைப்பு துறை வீரர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறும், நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.