உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று காலை போல்டன்புரத்தில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அவரோடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மஞ்சள் பை வழங்கப்பட்டது.