விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் இன்று (09.07.2022) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் அரசு கலைக் கல்லூரி பின்புறம் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரனை செய்ததில் அவர்கள் விளாத்திகுளம் கிழக்கு ரத வீதியைச் சேர்ந்த நாகபாண்டி மகன் முனீஸ்வரமூர்த்தி (20), விளாத்திகுளம் தேவர் தெருவை சேர்ந்த முருகன் மகன் ராமசாமி (எ) அஜய் (22) மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு இளஞ்சிறார் ஆகிய 3 பேர் என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் முனீஸ்வரமூர்த்தி, ராமசாமி (எ) அஜய் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் TN 67 L 9590 (Bajaj Pulsar) மற்றும் TN 69 AF 3552 (Hero Passion Pro) என்ற 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.