தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் தூத்துக்குடி உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் ஜனார்த்தனம், முருகேசன், அய்யாத்துரை, குமாரவேல், எம்.ஜி.ஆர். மாணிக்கம், முன்னாள் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சகாயராஜ், பொன்னம்பலம், மாரியப்பன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், கிருஷ்ணன், வீரபாண்டியன், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கத்தை கட்டி காக்கும் திறமை கொண்ட எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமியை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க.வை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து முடக்கம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுவரும் ஓ.பன்னீர்செல்வத்தை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து சென்னையில் நடைபெறும் அதி.மு.க. கூட்டத்திற்கு திரளான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பங்கேற்க முடிவு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.