• vilasalnews@gmail.com

மண்வெட்டி பிடித்து குப்பை செடிகளை வெட்டி வீசிய கனிமொழி எம்பி!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப் பட்ட துப்புரவு பணியில், கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மண்வெட்டி பிடித்து குப்பை செடிகளை வெட்டி வீசி தூய்மை பணி மேற்கொண்டனர்.

நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்கா வளாகத்தில், பொதுமக்கள், மாணவ மாணவியர், தன்னார்வ தொண்டு அமைப்புகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து துப்புரவு பணி மேற்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், தூத்துக்குடி பாராளு மன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் கலந்து கொண்டூ மண்வெட்டி பிடித்து குப்பை செடிகளை வெட்டி வீசி துப்புரவு பணி மேற்கொண்டு அப்பணியை தொடங்கி வைத்தனர். தொடார்ந்து அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டினர்.

அதனையடுத்து, கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கடற்கரை சாலையில் சிறிது தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். முன்னதாக, அனைவரும் தூய்மை உறுதி எடுத்தனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே பள்ளி வேன் விபத்து - 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயம்!

எட்டையாபுரம் அருகே கபடி போட்டி - அதிமுக நகர செயலாளர் தொடங்கி வைத்தார்.

  • Share on