• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே பள்ளி வேன் விபத்து - 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயம்!

  • Share on

விளாத்திகுளம் அருகே தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள், வேன் டிரைவர் என 3 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள அம்பாள் பள்ளி வாகனமானது இன்று மாலையில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு எட்டயபுரம் நோக்கி வந்துள்ளது.

இந்த வாகனத்தினை சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராதாகண்ணன் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த நிலையில் விளாத்திகுளம் அருகேயுள்ள குமரெட்டியபுரத்தில் மாணவர்கள் இறக்கி விட்டு வாகனம் வந்து கொண்டு இருக்கும் போது திடீரென வாகனம் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளித்தில் கவிழ்ந்து விபதுக்குள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் கருணேஸ், முரளிதரன் மற்றும் வேன் டிரைவர் ராதாகண்ணன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் பிணைப்பத்திரத்தை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட ரவுடிக்கு சிறை

மண்வெட்டி பிடித்து குப்பை செடிகளை வெட்டி வீசிய கனிமொழி எம்பி!

  • Share on