அதிமுகவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நிறைவேற்றக் கூடிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தான் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ வழிகாட்டுதலின்படி, எட்டையபுரத்தில் நகர அவைத்தலைவர் கணபதி மற்றும் மாவட்ட பிரதிநிதி சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலையில் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தற்போது திமுகவை எதிர்க்க கூடிய ஒரே சக்தி படைத்த தலைவராக திகழும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக புரட்சித்தலைவி அம்மாவின் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இரட்டை தலைமை தேவை இல்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆல் 1972 ஆம் ஆண்டு திமுகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னால் இந்தியாவிலேயே 3 வது மிகப்பெரிய கட்சியாக அதிமுக உருவாக்கி சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மாவின் சீரிய வழியை பின்பற்றி வலிமை மிக்க தலைவராக திகழ்ந்து வரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எட்டையபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் , மாவட்ட பிரதிநிதி வேல்சாமி, பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் அய்யம்மாள், கோவில்பட்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளரும் எட்டையாபுரம் 9 வது வார்டு செயலாளருமான செல்வி, 12 வது வார்டு செயலாளர் சாந்தி, 15வது வார்டு செயலாளர் கருப்பசாமி, மணிகண்டன் உள்ளிட்ட அதிமுகவினர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.