• vilasalnews@gmail.com

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் - மனுக்களை நேரடியாக வாங்கி கேட்டறிந்தார் எஸ்பி

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில்  நடைபெற்றது.

தமிழக அரசு உத்தரவுப்படி முதல் மற்றும் 3வது புதன் கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இம்மாதத்தின் முதல் புதன் கிழமையான இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 34 நபர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாள் மதுபான கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்சார வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள் - மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு

  • Share on