முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய 2 பேர் போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் பாண்டியன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று (05.07.2022) முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு to மணக்கரை சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் திருநெல்வேலி மாவட்டம் தேநீர்குளம் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சீதராமன் (25) மற்றும் திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் ராகேஷ் (19) ஆகியோர் சட்டவிரோதமாக விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் சீதாராமன் மற்றும் ராகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் TN 69 AT 5160 (Honda Unicorn) மற்றும் TN 72 BB 2170 (Bajaj Discover) என்ற 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.