தூத்துக்குடி வாணியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி செவ்வாய் கிழமை இரவு நடைபெற்ற 3ம்கால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீதாஜீவன் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜீவன்ஜேக்கப் இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளரும் அரசு வழக்கறிஞருமான சுபேந்திரன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
விழாவில் நிர்வாகிகள் காளி, ஆறுமுகம், முருகன், பாவநாசம் சந்தனமாரியப்பன், அருனாச்சலம், ஆவுடையப்பன், பரமசிவம், கண்ணன், கணேசன், கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.