தூத்துக்குடியில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (06.07.2022) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
"தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி கீழ்க்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (06.07.2022) புதன்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை பின்வரும் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர் வடக்கு உப கோட்டத்திற்குட்பட்ட சுந்தரராமபுரம் நடராஜபுரம் சுற்றியுள்ள பகுதிகள் கணேசபுரம், பாத்திமா நகர்,ஜார்ஜ் ரோடு மேற்கு, வண்ணார் மூன்றாவது தெரு, தாமோதரன் நகர், மதுரா கோட்ஸ் பின்புறம் உள்ள ஏரியா, காளியப்பர் தெரு, வடக்கு ராஜா, அழகாபுரி, உப்பள பகுதிகள், தெற்கு பீச் ரோடு உப்பள பகுதிகள், ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 1 முதல் 10 வரை
மீனாட்சிபுரம், பால விநாயகர் கோவில் தெரு, மேலூர் பங்களா தெரு, பாளை ரோடு, ஜார்ஜ் ரோடு, கணேஷ் புரம், பாத்திமா நகர், தாமோதரன் நகர், வண்ணார் 3வது தெரு, வண்ணார் 3வது தெரு, லெவிஞ்சிபுரம், பக்கிள் புரம், சிவந்தாகுளம், முனியசாமி புரம், லோக்கியா நகர், திருச்செந்தூர் மெயின் ரோடு, பொட்டல் காடு விலக்கில் அமைந்துள்ள குடிநீர் வடிகால் வாரியம் மின் இணைப்புகள், உப்பள பகுதி கோயில் பிள்ளை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
ஒட்டநத்தம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் கலப்பபட்டி, வேப்பங்குளம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஓட்டப்பிடாரம் துணைமின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழக்கும் ஓட்டப்பிடாரம் பஜார், சவரிமங்கலம், கொம்பாடி, கொம்பாடி தளவாய்புரம், S.புதூர், கந்தசாமிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்,
கொம்புகாரநத்தம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் வடக்கு காரசேரி, காசிலிங்காபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.