• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "மக்கள் சங்கமம் மாநாடு"

  • Share on

தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில், இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாகவும், போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும் பாப்புலர் இந்தியா சார்பாக "மக்களாட்சியை பாதுகாப்போம்'' (Save the Republic) என்ற முழக்கத்தோடு "ஜனவரி 26 முதல் ஆகஸ்ட் 15" வரை பொதுக்கூட்டம் பேரணி கருத்தரங்கம், கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை தேசம் முழுவதும்  நடைபெற்று வருகின்றது.

அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரில் 17.07.2022 அன்றும், அய்யார் ஊத்து பகுதியில் 23.07.2022 அன்றும் உடன்குடி பகுதியில் 31.07.2022 அன்றும், நிறைவு நிகழ்ச்சியாக தூத்துக்குடி மாநகரிலும் மிக எழுச்சியாக மாபெரும் பொதுக்கூட்டம் 07.08.20229 அன்று நடைபெற உள்ளது. என தெரிவித்தனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் காதர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநகர தலைவர் அப்துல் ஹாலிக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டட செயளாளர் சம்சு மரைக்காயர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாதுஷா, முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து பாஜக அறப்போராட்டம்!

தூத்துக்குடி மாநகர பகுதி, ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் ரோடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்!

  • Share on