டில்லி சுதந்திர தின விழாவில் பங்கேற்க செல்லும் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினரின் பைக் பேரணிக்கு தூத்துக்குடியில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் டில்லியில் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவுள்ள 75வது சுதந்திர தின விழா பைக் பேரணியில் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்புபடையினர் பங்கேற்கின்றனர். இதற்காக மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 10 போலீஸ் ஸ்டேஷன் களில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் தலா 2 பேர் வீதம் 6 பைக்குகளில் கடந்த 1ம் தேதி மதுரை இருந்து பைக்கில் பேரணியாக டில்லிக்கு புறப்பட்டனர். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் பேரணியை துவக்கி வைத் தார். தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கு இன்று ( 5.7.2022) காலை பைக்கில் பேரணியாக வந்த ரயில்வே பாது காப்பு படையினருக்கு தூத்துக்குடி ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் கண்ணன் , எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வரவேற்பு அளித்தனர். இந்த பேரணிக்கு உதவி ஆய்வாளர் ஜார்ஜ் முள்ளர் தலைமை வகித்தார்.
தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே பணிகள், துறையின் 4 சாதனைகள், மத்திய அர சின் இலவச குடிநீர் திட்டம் குறித்து எல்.இ.டி., டிவி மூலம் பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.