தமிழகத்தில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 60 நிறுவ னங்கள், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அரசுடன் கையெழுத்திட்டன.
இதில், ‘ஆக்மே' நிறுவனம், 52 ஆயிரத்து 695 கோடி ரூபாய் முதலீட்டில், துாத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தி திட்டத்தைத் துவங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக தொழில் துறை சார்பில், முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஆக்மே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, துாத்துக்குடியில் உள்ள 2,095 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.