• vilasalnews@gmail.com

துாத்துக்குடியில் சூறாவளி காற்று - பனைமரம் விழுந்து ஒரு வயது குழந்தை பலி!

  • Share on

துாத்துக்குடியில் சூறாவளி பலத்த காற்றால் பனைமரம் விழுந்ததால் ஒருவயது பெண் குழந்தை உயிரிழந்தது.

துாத்துக்குடி, கேவிகே நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி (43), டிரைவர் இவரது மனைவி பாலா. இத்தம்பதிக்கு பவானி (1), பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு பலத்த காற்று வீசியது. அப்போது வீட்டிற்கு வெளியே இசக்கி யின் சகோதரி ராஜேஸ்வரி, குழந்தை பவானிக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்தார்.

அப்போது வீசிய பலத்த காற்றில் வீட்டிற்கு அருகில் இருந்த பனை மரம் விழுந்ததில் பெண் குழந்தையின் தலை சிதறி பரிதாபமாக இறந்தது. குழந்தையின் அத்தை படுகாயங்களுடன் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து துாத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். சம்பவ இடத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே 100 நாள் திட்டத்தில் பணிப்பொறுப்பாளர் மீது பொதுமக்கள் புகார் - சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு!

முதலீட்டாளர் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் - ரூ.53 ஆயிரம் கோடி துாத்துக்குடியில் முதலீடு!

  • Share on