• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே 100 நாள் திட்டத்தில் பணிப்பொறுப்பாளர் மீது பொதுமக்கள் புகார் - சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு!

  • Share on

விளாத்திகுளம் அருகே 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இடைச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். 

இவர்கள் தங்களுக்கு இங்குள்ள 100 நாள் வேலை திட்ட பணிப்பொறுப்பாளர் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக சரிவர பணி கொடுக்காமல் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் என்றும், தற்போதுள்ள பணி பொறுப்பாளரை நீக்கிவிட்டு அதற்கு வேறொருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று இடைச்சியூரணியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • Share on

திருச்செந்தூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு - மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

துாத்துக்குடியில் சூறாவளி காற்று - பனைமரம் விழுந்து ஒரு வயது குழந்தை பலி!

  • Share on