• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு - மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on

திருச்செந்தூர் பாரதியார் தெருவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருச்செந்தூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வினோத் ( 22) . இவர் சாலையோர பழவியாபாரம் செய்து வருகிறார். வினோத் கடந்த 1ம் தேதி இரவு தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து மறு நாள் காலை பார்த்தபொழுது தனது இருசக்கர வாகனம் திருடு போனதையறிந்த வினோத் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் வினோத் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 30 வயது மதிக்க தக்க பேண்ட் சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் வினோத்தின் இருசக்கரவாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி திருடனை தேடி வருகின்றனர்.

  • Share on

விளாத்திக்குளம் பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்திவரும் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

விளாத்திகுளம் அருகே 100 நாள் திட்டத்தில் பணிப்பொறுப்பாளர் மீது பொதுமக்கள் புகார் - சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு!

  • Share on