• vilasalnews@gmail.com

மடத்தூரில் லாரி புக்கிங் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியை திருடியவர் கைது!

  • Share on

மடத்தூரில் லாரி புக்கிங் ஆபீஸ் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியை திருடியவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி பூபல்ராயர்புரத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் பாஸ்கர் (48) என்பவர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் லாரி புக்கிங் ஆபீஸ் வைத்து தொழில் செய்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று (03.07.2022) இவரது லாரி புக்கிங் ஆபீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஸ்கருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று திருடு போனது.

இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாஸ்கரிடம் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த சுகந்திரம் மகன் கணேசன் (42) என்பவர் மேற்படி பாஸ்கரின் லாரியை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான டாரஸ் லாரியையும் பறிமுதல் செய்தார்.

  • Share on

விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

விளாத்திக்குளம் பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்திவரும் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

  • Share on