• vilasalnews@gmail.com

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு - செப்டம்பர் 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது!

  • Share on

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மின் கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு  (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது. 

இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும் இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.  

இத்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தொழிற்பயிற்சி நிலையம் துாத்துக்குடியில் 22.07.2022-க்குள் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் துணை இயக்குநர் / முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா  தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி நெய்தல் கலைவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • Share on