தூத்துக்குடி அலங்கார தட்டு பகுதியில் நகர்புற நல வாழ்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட திறப்பு விழா இன்று ( 4.7.2022 ) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நகர்புற நல வாழ்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகர், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மற்றும் சுகாதர அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.