• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்!

  • Share on

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று முதல் அனல் மின் நிலையத்தில் ஒன்று மற்றும் 5-வது அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடந்து வருகிறது. 

2-வது, 3-வது மற்றும் 4-வது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

  • Share on

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழா - 501 திருவிளக்கு பூஜை!

நடுக்கடலில் கனிமொழி எம்பி.. தூத்துக்குடி மீனவன் குடும்பத்துடன் மீன்விருந்து!

  • Share on