தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கொடைவிழாவையொட்டி முத்துமாரியம்மன் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தாள். திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவ வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, கொரோனா நோய்தொற்றிலிருந்து அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவரும் தர்மகர்த்தா கோட்டுராஜா, செயலாளர்கள் சுப்பிரமணியன், ஞான்ராஜ், பொருளாளர் பழனிக்குமார், துணைத்தலைவர்கள் எஸ்.பொன்ராஜ், ஜி.பொன்ராஜ், பிரபு, துணைச்செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், கனகமாரியப்பன், மேற்கு மண்டல மாநகராட்சி தலைவர் அன்னலட்சுமி, வட்டச்செயலாளர் செல்வ மாரிஈஸ்வரன் மகளிர் அணியினர் செய்திருந்திருந்தனர்.