கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நகராட்சி ஆணையாளர் ராஜாராம் தலைமையில் நடந்தது. கோவில்பட்டி தாசில்தார் சுசிலா, சுகாதார அதிகாரி நாராயணன், வருவாய் ஆய்வாளர் பிரேம்குமார் சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், வள்ளிராஜ், மேற்பார்வையாளர்கள் கனி, முருகேசன், விஜயகுமார் மேற்பார்வையில் சுகாதாரப் பணியாளர்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த 30 தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.
மேலும் கடைகளில் கான்கிரீட் தூண்கள் அமைத்து, அஸ்பஸ்டாஸ் மற்றும் தகர கூரைகள் வைத்துள்ள கடைக்காரர்கள், தாங்களாகவே அகற்றி கொள்வதற்கு அவகாசம் கேட்டனர். இதை ஏற்று அவற்றை அகற்றுவதற்கு ஆணையாளர் நா(சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் அவகாசம் கொடுத்துள்ளார்.