தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு-மீட்பு பணித்துறை அலுவலர் குமார் உத்தரவின்பேரில், வல்லநாடு துப்பாக்கி சுடுதள காவல்துறை கமாண்டோ வீரர்களுக்கான சிறப்பு தீத்தடுப்பு பயிற்சி முகாம் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு, கமோண்டோ உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் இசக்கி மற்றும் நிலைய அலுவலர்(போக்குவரத்து) முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், 160 கமாண்டோ வீரர்களுக்கு, ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் ஜெசுபால் ஞானத்துரை தலைமையிலான வீரர்கள் தீ விபத்துக்களின்போது தீயை தடுத்து அணைப்பது மற்றும் முதலுதவி அளித்தல் குறித்த பயிற்சிகளை செயல் விளகத்துடன் வழங்கினர்.
இதில், தீயணைப்பு மற்றும் மீட்புபணி நிலைய வீரர்கள், கமாண்டோ வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்