தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வருகிற 12-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19-ந் தேதி கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26-ந் தேதி தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தூத்துக்குடி மேற்பார்வை என்ஜினீயர் குருவம்மாள் தெரிவித்து உள்ளார்.