• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அமலுக்கு வந்த பிளாஸ்டிக் பொருள் தடை - கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

  • Share on

தூத்துக்குடியில் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.  இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று மாநகர் நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி பகுதி முழுவதும்  கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி பகுதி முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

ஓட்டல், டீக்கடை, மளிகை கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளிலும் மாநகராட்சி அலுவலர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், உணவு பொருட்களை பொட்டலமிடும் உறைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும். எனவே, வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

மின் மோட்டார் வயர்களை திருடிய இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் உடனடியாக கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி அறிவிப்பு!

  • Share on