கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மின் மோட்டாரில் பயன்படுத்தப்படும் வயர்களை திருடிய இளஞ்சிறார்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை அண்ணா புது தெரு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி மகன் ஆனந்த்பாபு (32) என்பவர் தனக்கு சொந்தமான கழுகுமலை பழங்கோட்டை to ஆலங்குளம் ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து லோடு ஆட்டோ மூலம் அப்பகுதியில் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆனந்த்பாபு மேற்படி தோட்டத்திற்கு நேற்று (30.06.2022) சென்று பார்க்கும்போது அங்கு மின் மோட்டாரில் பயன்படுத்தப்படும் வயர்கள் அறுக்கப்பட்டு காணாமால் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆனந்த்பாபு இன்று அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி போலீசாரின் விசாரணையில், கழுகுமலை திருமாளிகை தெருவை சேர்ந்த சாமிதாஸ் மகன் சீமோன்ராஜ் (55) மற்றும் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 2 இளஞ்சிறார்கள் ஆகியோர் மேற்படி ஆனந்த்பாபுவின் தோட்டத்தில் இருந்த மின் வயர்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரியப்பன் மேற்படி சீமோன்ராஜ் மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள 70 மீட்டர் நீளமுள்ள மின் வயர்களை பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.