• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியரிடம் மது போதையில் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 3 பேரை போலீசார்  கைது செய்தனர்.

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று (29.06.2922) தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான முத்துராஜ் மகன் மூர்த்தி (21),  லெனின் மகன் சரவணன் (22) மற்றும் தூத்துக்குடி லோகியா நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (28) ஆகிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் அவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்துள்ளனர்.

இதனையடுத்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரான தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் சங்கர் (48) சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி 3 பேரும் சேர்ந்து டாஸ்மாக் கடை விற்பனையாளரான சங்கரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் டாஸ்மாக் கடையில் இருந்த ரூபாய் 80,000/-  பணத்தையும் மது பாட்டில்களையும் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் வழக்குபதிவு செய்து மேற்படி மூர்த்தி, பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

மேற்படி கைது செய்யப்பட்ட  மூர்த்தி மீது ஏற்கனவே தென்பாகம், சிப்காட், தெர்மல்நகர் மற்றும் ஆத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

விளாத்திகுளம் : கருவேல மரங்களை வெட்டும் போது தகராறு - ஒருவர் கைது!

கனிமொழி எம்பி அறிவித்த நெய்தல் விழா... கொந்தளிக்கும் மீனவ அமைப்பினர்!

  • Share on