விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்வமரத்துபட்டி இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த உமையணன் மகன் தவசி (65) என்பவரின் 50 சென்ட் நிலமும், அதே பகுதியை சேர்ந்த பச்சைமால் மகன் மாரிமுத்து (52) என்பவரது 50 சென்ட் நிலமும் அருகருகே உள்ளது. இந்நிலையில் கடந்த 28.06.2022 அன்று மேற்படி தவசி தனது நிலத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டும் போது மேற்படி மாரிமுத்துவின் நிலத்தில் உள்ள கருவேல மரங்களையும் சேர்த்து வெட்டி உள்ளார்.
இதன் காரணமாக மாரிமுத்து தவசியிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தவசி நேற்று (29.06.2022) அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவராஜ் வழக்கு பதிவு செய்து மேற்படி மாரிமுத்துவை கைது செய்தார்.