• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு!

  • Share on

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்,  ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திக்குளம் மற்றும் பூசனூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மேற்கொண்டார், தெற்கு குளத்தூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டம் / நீர் வடி பகுதி மேம்பாட்டின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் 2.70 ஏக்கர் பரப்பளவில் இயற்கை வள மேம்பாட்டு பணியின்கீழ் நடைபெற்று வரும் ஊரணி சீரமைக்கும் பணியினை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு இப்பணி முடிவடையும்போது 4.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பூசனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டம் / நீர் வடி பகுதி மேம்பாட்டின் கீழ் ரூ.2.86 இலட்சம் மதிப்பில் 0.39 ஏக்கர் பரப்பளவில் தடுப்பணை அமைக்கும் பணியினை ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி முடிவடையும்போது 2.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும். வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மந்திக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கீழ் மந்திக்குளத்தில் காசிநாடாருக்கு சொந்தமான நிலத்தில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் மந்திக்குளம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வுகளில் வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர்கள் வேளாண்மை, உழவர் பயிற்சி நிலையம், நுண்ணீர் பாசனம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை நாச்சியார், தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஷீலா, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்

  • Share on

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண் உட்பட 2 பேர் கைது!

தூத்துக்குடியில் சிப்பெட் கல்வி மையம்!

  • Share on