• vilasalnews@gmail.com

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண் உட்பட 2 பேர் கைது!

  • Share on

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள்மொழி மற்றும் போலீசார் நேற்று (19.06.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் எப்போதும்வென்றான் கன்னக்கட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (45) மற்றும் எட்டையாபுரம் வடமலாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி சண்முகத்தாய் (55) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் வேல்முருகன் மற்றும் சண்முகத்தாய் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த  ரூபாய் 1,97,000/- மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 30,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை விற்பனை – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு!

  • Share on