• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலை விற்பனை – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான விளம்பரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும். தூத்துக்குடி சுற்றி உள்ள கிராம மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பு கடந்த 2018ம் ஆண்டு கடும் போராட்டமாக மாறியது. மேலும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுகொல்லபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணைப்படி ஸ்டெர்லைட் ஆலை 2018ம் ஆண்டு மே 28ம் தேதி மூடப்பட்டது. கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக கடந்த ஆண்டு3 மாதங்கள் மட்டும் ஆலை இயங்கியது. மேலும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதிகேட்ட வேதாந்தா மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ஆலையை வாங்க விருப்பமுள்ளோர் ஜீலை  4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணபிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடி மக்களின் தாகத்தை தணித்திருக்கும் முத்து நகர் கடற்கரை!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண் உட்பட 2 பேர் கைது!

  • Share on