காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 114வது பிறந்தநாளான இன்று (18.06.2022), தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போல்டன்புரத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், மாநகர் மாவட்ட துணை தலைவர் அருணாசலம், மாவட்ட செயலாளர்கள் கோபால், சேவியர் மிஷியர், நீர்மல்கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, மண்டல தலைவி சாந்தி, மரிய செல்வராஜ், சின்னகாளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.