இந்திய சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் வீரவாஞ்சிநாதன் நினைவுதினத்தை முன்னிட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்திய சுதந்திரபோராட்ட வீரர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, ஆங்கிலேயன் ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் சுட்டுகொன்று வெள்ளையர்கள் கையில் சிக்கிமடியக்கூடாது என தன்னைதானே சுட்டுகொண்டு வீரமரணம் அடைந்து உயிர்த்தியாகம் செய்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதனின் 111வது நினைவுதினத்தை முன்னிட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஜெயபிரகாஷ் தலைமையில், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் நிவர்த்தி பாலு, இளைஞரணி முத்துசிவம், திருநெல்வேலி மாவட்ட தலைவர் முத்துராமன், சுரேஷ், சங்கர் தூத்துகுடி கணபதி, கன்னியாகுமரி மஹாராஜன், தென்காசி சிவா, கோவில்பட்டி நாராயணன், தூத்துகுடி இளைஞரணி வைப்பார் கார்த்திக், அம்பி கண்ணண் உள்ளிட்ட அந்தணர் முன்னேற்ற கழக நிர்வாகிகள், மகளிரணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பத்திரிக்கையாளரை சந்தித்த அந்தணர் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் ராஜாளி ஜெயபிரகாஷ்
அரசு சார்பில் நடைபெறும் வாஞ்சிநாதன் நினைவு அஞ்சலியில் முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தாதது வேதனையை தருகின்றது. அடுத்த ஆண்டு முதல்வர் அவர்கள் கலந்துகொண்டு வாஞ்சிநாதனுக்கு நினைவுஅஞ்சலி செலுத்தகோரிக்கை வைக்கிறோம்.
தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வீரவாஞ்சிநாதன் பெயரைசூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம், வாஞ்சி மணியாச்சி ரயில்நிலைய முகப்பில் வீரவாஞ்சிநாதனுக்கு முழுஉருவ வெண்கலசிலை நிறுவவேண்டும், பிராம்மணர்களை இழிவாக அச்சுறுத்தும் வகையில் பேசும் திமுக நிர்வாகிகளை முதல்வர் கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், பிராமணர்களின் கோரிக்கையை கேட்க அந்தணர் முன்னேற்ற கழகத்திற்கு முதல்வர் நேரம் ஒதுக்கிதரவேண்டும், பிராம்மணர்களை இழிவாகபேசிவரும் யூடியூப்பர்களை கைதுசெய்யவேண்டும் என தெரிவித்தார்.