நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, கடந்த 13ம் தேதி டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து, தொடர்ந்து மூன்று நாட்களாக ராகுல்காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை 17-06-22 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின் படி, தூத்துக்குடி தெற்கு,வடக்கு மற்றும் மாநகர் மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.