எட்டயபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமணவிழாவில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ உள்பட முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் இல்லத்திருமண விழா எட்டயபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், இந்த திருமண நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார், எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ குமார் வரவேற்புரையாற்றினார். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.