கயத்தாறு அருகே அனுமதியின்றி டிப்பர் லாரியில் சரள்மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காசிலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று (05.06.2022) கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து மேற்படி டிப்பர் லாரியின் ஓட்டுநரான கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கிலி பாண்டி (34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 4 யூனிட் சரள் மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 72 M 7475 (Tipper Lorry) என்ற டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தார்.