• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on

செயின் பறிப்பு, புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனையில் வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 11.05.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டேட்ட பாங்க் காலனி குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா என்பவரது மனைவி சகாய சித்ரா (52) என்பவரிடம் அவரது கழுத்தில் இருந்த 7 ¼ பவுன் தங்க தாலி செயினை பறித்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த  ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் லேடன் (எ) பின்லேடன் (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2,25,000/- மதிப்புள்ள 7 ¼ பவுன் தாலி செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

மேற்படி இவ்வழக்கின்  முக்கிய நபரான லேடன் (எ) பின்லேடன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ்சும்,

கடந்த 28.05.2022 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தார் to கடம்பூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் கயத்தார் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மகன் உச்சிமகாளி (45), கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (29) மற்றும் கயத்தார் சாலிவாகனார் தெருவை சேர்ந்த சிவன் மகன் சுடலைமணி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 16,000/- மதிப்புள்ள 9 ½ கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 58 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

மேற்படி இவ்வழக்கில் உச்சிமகாளி, மணிகண்டன் மற்றும் சுடலைமணி ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த  ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் 1)  லேடன் (எ) பின்லேடன், கயத்தார் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மகன் 2) உச்சிமகாளி, கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் 3) மணிகண்டன் மற்றும் கயத்தார் சாலிவாகனார் தெருவை சேர்ந்த சிவன் மகன் 4) சுடலைமணி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி  4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட 110 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தரப்பில் ஜீன் 4 ம் தேதியான இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

மாப்பிள்ளையூரணியில் கருணாநிதி பிறந்தநாள் விழா - புதிய வகுப்பறைக்கு அடிக்கல்!

சொத்தை மோசடியாக கிரையம் பத்திரம் பதிவு செய்ய ஆள்மாறாட்டம் - ஒருவர் கைது!

  • Share on