• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியில் கருணாநிதி பிறந்தநாள் விழா - புதிய வகுப்பறைக்கு அடிக்கல்!

  • Share on

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரூபாய் 2 லட்சம் செலவில் புதிய வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 99வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி  சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்புக், ஸ்கூல் பேக், மற்றும் சிறுகுறிப்பு தொண்டர் நாயனார் பள்ளி வளாகத்தில் ரூபாய் 2 லட்சம் செலவில் புதிய வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜோதிராஜா ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக தலைவர் சன்னாசி , செயலாளர் மாடசாமி, பொருளாளர் சக்திவேல், குரூஸ்புரம்  திமுக கிளைச் செயலாளர் உலகநாதன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஆனந்தகுமார், கூட்டாம்புளி ரூபன் மற்றும் மாரிச்செல்வம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Share on

ரூ.2.28 கோடி மதிப்பில் சமத்துவபுரத்தில் மேம்பாட்டு பணிகள் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on