• vilasalnews@gmail.com

ரூ.2.28 கோடி மதிப்பில் சமத்துவபுரத்தில் மேம்பாட்டு பணிகள் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசுவப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ரூ.2.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், இன்று (02.06.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியில் தெரிவிக்கையில், 'வசுவப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 1999ம் ஆண்டு கட்டப்பட்ட 100 வீடுகள் சேதம் அடைந்து மழைக்காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே இங்கு அமைந்துள்ள வீடுகளை மேம்படுத்துவதற்காக சமத்துவ புரம் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படும் வீடுகளில் மழையினால் இடிந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும் அதிக அளவு பாதிக்கப்பட்ட வீடுகளையும் சீரமைத்திட முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் வீடுகள் கிடைக்கப்பெற்றவர்கள் பல ஆண்டுகளாக அவ்வீட்டில் தங்காதபட்சத்தில் அவ்வீட்டினை இப்பகுதியில் உள்ள வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு பொதுமக்கள் அனைவரும் ஏகமனதுடன் ஒத்துக்கொண்டனர்.

இப்பகுதியில் சாலைகளை செப்பனிடவும், பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரவும், புதிதாக 50 வீடுகள் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்திட போக்குவரத்து துறையிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

அதனைத்தொடர்ந்து கருங்குளம் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு மேம்பாடு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது

முன்னதாக சேதமடைந்த வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்கள்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வசுவப்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிமுத்து, செயலாளர் (பொறுப்பு)முத்து, கருங்குளம் ஊராட்சிமன்ற நியாயவிலைக்கடை தலைவர் கே.வி.மகாராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மாப்பிள்ளையூரணியில் கருணாநிதி பிறந்தநாள் விழா - புதிய வகுப்பறைக்கு அடிக்கல்!

  • Share on