• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகர முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் கட்டன வசூல் : மாநகராட்சி தீர்மானத்திற்கு பாஜக கண்டனம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் கொண்டுவரப்பட்ட, மாநகர முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் கட்டன வசூல் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வலிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 

கொரனோ பெருந்தொற்று, ரஷ்ய உக்ரைன் போர் போன்றவை காரணமாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாகவே தமிழகத்தில் மக்கள் மின்தடை, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பல்வேறு கஷ்டங்களை பொது மக்கள் நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர்.

தமிழக அரசால் மக்கள் ஒருபுறம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றால் மறுபுறம் தூத்துக்குடி மாநகராட்சியும் மக்களை துன்புறுத்துவதற்கு தயாராகி வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தலைமையில் நேற்று (30.05.2022)நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யப்படும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கிறார்கள். 

மாநகராட்சி தீர்மானத்தின்படி இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், 4 நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் வசூல் செய்யப்படும் என்று தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த தீர்மானத்தால் அத்தியாவசிய தேவைகளுக்காக பிரதான சாலைகளை அடிக்கடி பயன்படுத்தி வரக்கூடிய தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என்று மக்கள் அனைவருமே இதனால் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்த தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்த இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் தூத்துக்குடி மாநகராட்சி இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் மக்களை திரட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக முற்றுகையிட்டு நாங்கள் போராட்டம் நடத்துவோம். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

  • Share on

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவருக்கு புதிதாக வெண்கல சிலை - அமைச்சர் திறந்து வைத்தார்!

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

  • Share on