• vilasalnews@gmail.com

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவருக்கு புதிதாக வெண்கல சிலை - அமைச்சர் திறந்து வைத்தார்!

  • Share on

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவரின் 253வது பிறந்த நாளையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலையினை மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் அன்னாரது 253வது பிறந்த நாளையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலையினை  மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இன்று (31.05.2022) திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் ஏற்கனவே இருந்த சிலையினை மாற்றி தமிழக அரசு சார்பாக ரூ.39.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலை இன்று திறந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதிராஜேந்திரன், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் வெள்ளைச்சாமி, உதவி செயற்பொறியாளர் முருகம்மாள், முக்கிய பிரமுகர் உமரிசங்கர், சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் அவர்களின் வாரிசுதாரர்கள் மாரிமுத்து, சின்னத்தாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • Share on

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி - தூத்துக்குடி மாணவ மாணவியர்கள் சாதனை!

தூத்துக்குடி மாநகர முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் கட்டன வசூல் : மாநகராட்சி தீர்மானத்திற்கு பாஜக கண்டனம்!

  • Share on