மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியி, பல பதக்கங்களை பெற்று தூத்துக்குடி மாணவ மாணவியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் மே மாதம் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ரஜோ ஸ்கட்டிங் கிளப்பை சேர்ந்த 11 மாணவர்கள் பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் தலைமையில் தமிழ்நாட்டிற்காக களமிறங்கி 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வென்று வெற்றி வாகை சூடி புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை பிடித்தனர்.
இப்போட்டியில் மும்பை, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், நாக்பூர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.